உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நிலப்பிரச்னையில் இருவரை அரிவாளால் தாக்கி¼யோர் கைது

நிலப்பிரச்னையில் இருவரை அரிவாளால் தாக்கி¼யோர் கைது

அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்-பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம், 55. இவரது மகன் மகேந்திரன், 19. இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே, நிலப்பிரச்னையில் முன்விரோதம் உள்ளது. கடந்த, 9 மாலை, 5:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள பஞ்., பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, மகேந்திர-னுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்-டது. இதில், மகேந்திரன் மற்றும் அவரது தந்தை சிவலிங்கம் ஆகியோரை, கல், அரிவாளால் ஒரு கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். மகேந்திரன் புகார் படி, வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த பசப்பன், 55, ராஜமாணிக்கம், 38, பெருமாள், 45, அருண்பாண்டி, 24, ஆகிய, 4 பேரை அஞ்செட்டி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை