மேலும் செய்திகள்
2 மாணவியர் உட்பட 5 பேர் மாயம்
23-Jun-2025
ராயக்கோட்டை, ஜூலை 17ஓசூரை சேர்ந்தவர், 14 வயது மாணவி, அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 14 இரவு, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கீழ் கொல்லிப்பட்டியை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 29, மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்தவர் பெருமாள் மகள் சரண்யா, 19. தர்மபுரி மாவட்டத்தில், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், டிப்ளமோ இரண்டாமாண்டு படிக்கிறார். கடந்த, 13 இரவு, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்ற மாணவி திரும்பவில்லை. அவரது தந்தை பெருமாள் புகாரில், ராயக்கோட்டை அருகே முகலுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜீவா, 20, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Jun-2025