| ADDED : ஜூலை 30, 2024 03:08 AM
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் போலீசார் நேற்று முன்தினம் காலை கந்திகுப்பம் பெட்ரோல் பங்க் அருகில், சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 17 பசு மாடுகளும், 37 எருமை மாடுகளும் என மொத்தம், 54 மாடுகள் இருந்தன.விசாரணையில், அவை ஆந்திர மாநிலம் அனந்தபூரில் இருந்து, இறைச்சிக்காக பொள்ளாச்சிக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக, எலத்தகிரி கால்நடை மருத்துவர் சர-வணன் அளித்த புகார்படி, மாடுகளை இறைச்சிக்காக எடுத்து சென்ற திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சந்திரம் சிவக்குமார், 37, மஞ்சநாயக்கன்பட்டி செல்வகுமார், 46, விருபாச்சி அஜித்குமார், 26, ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம், பலமனேரி ரான்ராஜ்-பள்ளியை சேர்ந்த வெங்கட்ரமணன், 42 ஆகிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.