| ADDED : ஆக 01, 2024 01:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுந்தர், 45, தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல் எண்ணிற்கு கடந்த ஏப்., 8ல் ஒரு மெசேஜ் வந்தது. அதில், சில இணையதள 'லிங்க்' கொடுக்கப்பட்டு, பங்குசந்தைகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது. அதை நம்பிய அவர், அந்த 'லிங்க்' மூலம் சிறிதளவு முதலீடு செய்தபோது, கூடுதல் பணம் கிடைத்தது. இதையடுத்து தன்னிடமிருந்த, 5 லட்சம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். அதன் பின் அவருக்கு, எந்த பணமும் வரவில்லை. அவரை தொடர்பு கொண்ட இணையதளங்களும் முடங்கின. தனக்கு, மெசேஜ் அனுப்பிய எண்களை தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' என வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.