| ADDED : ஆக 08, 2024 05:48 AM
ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே, துாக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலத்தை மீட்ட போலீசார், அவரது கணவரை கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே அலேசீபத்தை சேர்ந்தவர் சுந்தரேசன், 24, எலெக்ட்ரீஷியன்; இவரும், ராயக்-கோட்டை அருகே கோணம்பட்டியை சேர்ந்த சத்தியா, 20, என்ப-வரும் கடந்த, 2 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.பண விவகாரத்தில் தம்பதிக்குள் தகராறு இருந்தது. நேற்று முன்-தினம் மாலை கெலமங்கலம் அருகே உள்ள கோவிலுக்கு அழைத்து செல்ல சத்தியா கேட்டபோது, சுந்தரேசன் மறுத்-துள்ளார். அன்றிரவு, 7:00 மணிக்கு வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்த சத்தியாவை மீட்ட அக்கம் பக்கத்தினர், சூள-கிரி அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பினர். அவரை பரிசோ-தனை செய்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.ஓசூர் அரசு மருத்துவமனையில் சத்தியாவிடம் சடலம் வைக்கப்-பட்டது. அங்கு நேற்று மதியம் திரண்ட அவரது உறவினர்கள், கணவர் சுந்தரேசன் தான், சத்தியாவை அடித்து கொன்று துாக்கில் தொங்க விட்டதாக குற்றம் சாட்டி, மருத்துவமனை முன் மறியல் செய்ய முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை தடுத்தனர்.இதற்கிடையே நேற்று, சத்தியாவை தற்கொலைக்கு துாண்டிய-தாக சுந்தரேசனை, உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.