உள்ளூர் செய்திகள்

நரசிம்மர் ஜெயந்தி

கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரமுள்ள ராம பக்த வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி விழா நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு, மஹாயாக வேள்வியும், 9:00 மணிக்கு, மஹா அபிஷேகமும், 10:30 மணிக்கு, சர்வ அலங்காரத்துடன் மங்கள மஹா தீபாராதனையும் நடந்தன. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை, 5:00 மணிக்கு, நரசிம்மர் நகர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி