உள்ளூர் செய்திகள்

விவசாயி பலி

கெலமங்கலம்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த ஜெ.காருப்பள்ளி அருகே காமையூரை சேர்ந்தவர் சந்திரப்பா,65; விவசாயி. இவரது மனைவி கவுரம்மா, 50. நேற்று முன்தினம் நண்பகல், 12:00 மணிக்கு, தனது மனைவி கவுரம்மா மற்றும் மருமகள் ஸ்வேதா, 28, ஆகியோரை அழைத்து கொண்டு, பஜாஜ் பைக்கில் சந்திரப்பா சென்றார். காமையூரில் லோகேஷ் என்பவரது வீட்டின் முன் சென்ற போது, கிருஷ்ணகிரி அருகே சிக்கபூவத்தி கிராமத்தை சேர்ந்த சூடப்பன், அதிவேகமாக ஓட்டி வந்த பிக்கப் வாகனம், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சந்திரப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி கவுரம்மா, மருமகள் ஸ்வேதா ஆகியோர் படுகாயமடைந்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி