உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு சம்பவத்தில் 2 பெண்கள், சிறுமி மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் 2 பெண்கள், சிறுமி மாயம்

ஓசூர், ஓசூர், நேதாஜி சாலையை சேர்ந்தவர் ராம்நாத், 55. இவரது மகள் பூஜா, 24; கடந்த, 1ல் மதியம், 2:00 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், சேலம் காஜல்நாயக்கன்பட்டி போயர் தெருவை சேர்ந்த சந்தோஷ்குமார், 26, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.சூளகிரி, கோட்டை தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி பவித்ரா, 24; நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். கணவர் புகார் படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர். தளி அருகே தேவர்பெட்டாவை சேர்ந்தவர், 18 வயது சிறுமி; நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் தளி போலீசில் கொடுத்த புகாரில், தேவர்பெட்டாவை சேர்ந்த மோகன், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை