உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆப்பிளை விட விலை கூடுதல் கொடுக்காப்புளி கிலோ ரூ.400

ஆப்பிளை விட விலை கூடுதல் கொடுக்காப்புளி கிலோ ரூ.400

ஓசூர்:ஓசூரில், 1 கிலோ கொடுக்காப்புளி, ஆப்பிள் விலையை விட அதிகமாக கிலோ, 400 ரூபாய்க்கு விற்கிறது.தமிழகத்தில் பிப்., மார்ச், ஏப்., மாதங்களில் கொடுக்காப்புளி சீசன். கிராமப் புறங்களில் விலையின்றி கிடைக்கும் இதை, நகரத்து மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் இருந்து வரும் கொடுக்காப்புளி பழங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தற்போது விற்பனையாகின்றன.ஆப்பிள் கிலோ, 250 ரூபாய் என விற்கும் நிலையில், அதைவிட அதிகமாக, 1 கிலோ கொடுக்காப்புளி, 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து, வியாபாரிகளிடம் கேட்டபோது, 'கால் கிலோ, 100 ரூபாய் என விற்கிறோம். இந்த மரம் முழுதும் முள் இருக்கும் என்பதால், இதை பறிக்க மிகவும் கஷ்டப்படுகிறோம். இதை, கிராமங்களில் கூட பறிக்க ஆள் இல்லை. இதன் சீசன், 3 மாதங்கள் தான் என்பதால் விலை சற்று அதிகமாகத் தான் இருக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !