உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வனத்தில் மாட்டை தேடி சென்ற தொழிலாளி சடலமாக மீட்பு

வனத்தில் மாட்டை தேடி சென்ற தொழிலாளி சடலமாக மீட்பு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த பெல்லட்டி எஸ்.டி., காலனியை சேர்ந்தவர் உளிரப்பா, 44; கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 23ல், 4 மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் ஓட்டி சென்றார். மாலையில், 3 மாடுகள் மட்டுமே வீட்டிற்கு திரும்பின. அதனால், 24 காலை, 9:00 மணிக்கு, மாட்டை தேடி உளிரப்பா வனப்பகுதிக்கு சென்றார். நேற்று முன்தினம் வரை அவர் திரும்பாததால், மனைவி மாத்துாரி, 40, புகார் படி, அஞ்செட்டி போலீசார் உளிரப்பாவை தேடினர்.கொமாத்தி மடுவு வனப்பகுதியில் அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் வைத்திருந்த பையில், காட்டு கிழங்குகள் இருந்தன. யானைகள் அவரை தாக்கவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். அதனால் அவர், உடல்நிலை பாதித்து உயிரிழந்தாரா, வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை