மேலும் செய்திகள்
உணவு தானியங்களை விற்ற அங்கன்வாடி பெண் ஊழியர்
17-Aug-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெ க்டர் அலுவலகம் பின்புறமுள்ள மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு, அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் கோவிந்தம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தேவி, மாநில செயற்-குழு உறுப்பினர் கஸ்துாரி பேசினர். மாவட்ட செயலாளர் சுஜாதா நன்றி கூறினார்.போராட்டத்தில் கடந்த, 2018ல் பணியில் சேர்ந்த மினி மைய ஊழியருக்கும், 2011ல் பணியில் சேர்ந்த மினி மைய ஊழியர்கள், 8 பேருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். 2017 முதல் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்கு உள்ளூர் பணி மாறுதல் வழங்கவில்லை. மினி மையத்தில் பணி-யாற்றும், 371 ஊழியர்களில், 156 பேர் பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கும் பணி மாறுதல் உடனே வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷம் எழுப்பினர். இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
17-Aug-2024