உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண் பர்ஸை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்

பெண் பர்ஸை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்

கிருஷ்ணகிரி: சூளகிரியிலிருந்து, அமிர்தா என்ற பெண், தன் உறவினர் வீட்டிற்கு செல்ல, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். அங்கு ஆட்டோவில் சென்றபோது, தன் பர்ஸை தவற விட்டுள்ளாார். பல இடங்களில் தேடியும் பர்ஸ் கிடைக்கவில்லை.ஆட்டோ ஓட்டுனர் சர்தார் மற்றும் சலீம் ஆகியோரிடம் இந்த பர்ஸ் சிக்கியது. பர்ஸில் அடையாள அட்டையில் இருந்த எண்ணை, 'வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வளைதலங்களில் பதிவிட்டனர். இதை பார்த்த அமிர்தா, அதிலிருந்த ஆட்டோ ஓட்டுனர்களின் எண்ணில் தொடர்பு கொண்டு, நேரில் சென்று சந்தித்தார்.அப்போது ஆட்டோ ஓட்டுனர்கள் அமிர்தாவிடம் பர்ஸை ஒப்படைத்தனர். பர்ஸில், 5,900 ரூபாய், நகை அடமான பில் ஆகியவை இருந்தததால், அமிர்தா, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை