உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நாகசதுர்த்தியை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

நாகசதுர்த்தியை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சின்னதக்கேப்பள்ளி நாகவனத்தில் உள்ள நாகம்மன் கோவில், 16-ம் ஆண்டு நாக சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக, பெரியதக்கேப்-பள்ளி கிராமத்தில் இருந்து, 52 கிராமங்களை சேர்ந்த பெண்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக சின்னதக்கேப்பள்ளி, மால-குப்பம் வழியாக, நாகவனம் கோவிலுக்கு சென்றனர். அங்கு நாகம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்ம-னுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. விழாவில், 52 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும், உலக மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவேண்டியும் சிறப்பு வழி-பாட்டில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை