பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டசபை தொகுதி, பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. கிருஷ்ண-கிரி கிழக்கு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். தொகுதி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் ஜெய-ராமன் வரவேற்றார். கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட உறுப்பினர் சேர்க்கை பார்-வையாளர் முனிராஜ் மற்றும் உறுப்பினர் சேர்க்கை மாவட்ட இணை பொறுப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் பா.ஜ., மாநில, மாவட்ட, மண்டல, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர் படி-வத்தை பெற்றுக் கொண்டனர்.