உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பரோட்டாவிற்கு சாம்பார் கொடுத்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

பரோட்டாவிற்கு சாம்பார் கொடுத்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி:பரோட்டாவிற்கு சாம்பார் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பை சேர்ந்த, 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.கிருஷ்ணகிரி தேவசமுத்திரத்தை சேர்ந்தவர் வினீத், 26; இவர், ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலுள்ள ஒரு ஓட்டலில் சர்வராக பணியாற்றி வருகிறார். கடந்த, 26 ல் இவரது ஓட்டலுக்கு கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்த தமிழரசன், 29, பரோட்டா பார்சல் வாங்க வந்தார். அப்போது, வினீத் தவறுதலாக பரோட்டாவுக்கு குருமா கொடுப்பதற்கு பதில், சாம்பாரை கவரில் கட்டி கொடுத்து விட்டார். இதை தமிழரசன் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்நிலையில், இரவு பணி முடிந்து வீடு திரும்பிய வினீத்துடன், அவரது நண்பர்கள் தேவசமுத்திரம் சுதர்சன், 22, பரத், 19, ஆகியோரும் சென்றனர். அவர்களை நமாஸ்பாறை மார்க்கெட் அருகே தமிழரசன் தரப்பினர், கைகளாலும், கட்டையாலும் தாக்கியதில் மூவரும் காயம‍டைந்தனர். வினித் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், தமிழரசன், 29, தமிழ்வாணன், 27, தங்கராஜ், 28, நதீம் அகமது, 25, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதே போல தமிழரசன் புகார் படி, வினித், 26, செந்தில், 47, செல்வராஜ், 35, பரத், 19, ஆகிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை