உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நீரின்றி காய்ந்து வரும் தென்னை மரங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நீரின்றி காய்ந்து வரும் தென்னை மரங்கள்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு, 29.1 செ.மீ., அளவிற்கு பெய்ய வேண்டிய வட கிழக்கு பருவமழை, கடந்தாண்டு, 11 செ.மீ., அளவிற்கு தான் பெய்துள்ளது. அதனால் தற்போது மாவட்டம் முழுதும் கடும் வறட்சியும், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. விவசாயத்திற்கு போதிய நீர் ஆதாரம் இல்லை. மக்கள் குடிப்பதற்கும், இதர தேவைக்கும் தண்ணீர் இல்லாமல் போராட்டம், சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில், 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் நடக்கிறது.இதனால், 5,000 லிட்டர் நீரை, 1,500 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். கோடை துவக்கத்திலேயே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மே மாதத்தை எப்படி சமாளிப்பது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.மாவட்டத்தில் கடும் வறட்சியால் மலர்கள், ராகி, நெல், தென்னை, வாழை, நிலக்கடலை என பல்வேறு வகையான பயிர்களுக்கு நீரின்றி, விவசாயம் பெரியளவில் பாதித்துள்ளது. காய்கறிகள் சாகுபடியும் பெரிய அளவில் பாதித்து, அதன் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குளிர்ந்த சீர்தோஷ்ண நிலையை கொண்ட ஓசூர் பகுதியில் கூட, 35 செல்ஷியஸ் அதாவது, 95 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தற்போது வெப்பம் பதிவாகிறது. அதனால், இப்பகுதியிலுள்ள தென்னை மரங்கள் காய துவங்கியுள்ளன. மாவட்டம் முழுதும் இதேநிலை தான் உள்ளது.கோடை மழை பெய்யாவிட்டால் மாவட்டத்தில், 30,000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்துள்ள தென்னை மரங்கள் நிலை மிகவும் மோசமாகி விடும். காசு கொடுத்த நீரை வாங்கி ஊற்றினால் தான், தென்னை மரங்களை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'கோடை வெப்பம் மற்றும் கடும் வறட்சியால், குலை தள்ள வேண்டிய தென்னை மரங்கள் காய்ந்துள்ளன. அவற்றை பாதுகாக்க நீரை விலைக்கு வாங்கி ஊற்ற வேண்டியுள்ளது. குறைந்தளவில் மரங்களை பராமரித்து வரும் சிறு விவசாயிகளால், மரங்களை காப்பாற்ற முடியாமல், வறட்சிக்கு பலி கொடுத்து விட்டனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை