உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தலை நசுங்கி கல்லுாரி மாணவர், மாணவி பலி

தலை நசுங்கி கல்லுாரி மாணவர், மாணவி பலி

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி ஆனந்த் நகரை சேர்ந்தவர் சஞ்சய், 18, ஓசூர் தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார்; ஓசூர் கே.சி.சி., நகரை சேர்ந்தவர் மரியா சில்வியா, 18, கர்நாடகா மாநிலம், மாலுார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். நண்பர்களான இருவரும் ஹெல்மெட் அணியாமல், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், 'டி.வி.எஸ்., அப்பாச்சி' பைக்கில் நேற்று மாலை சென்றனர். சூளகிரி அடுத்த ஒட்டையனுார் பஞ்., அலுவலகம் அருகே மாலை, 4:30 மணிக்கு வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது.தடுமாறி பைக்கிலிருந்து சாலையில் விழுந்த சஞ்சய் மற்றும் மரியா சில்வியா ஆகியோரின் தலை மீது வாகனம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை