உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., நிர்வாகியை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

தி.மு.க., நிர்வாகியை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டையைச் சேர்ந்தவர் ராமு, 44, ஓசூர் தி.மு.க., கிழக்கு பகுதி செயலர். இவரது அண்ணன் நாகராஜ், 48. இருவரும் நேற்று முன்தினம் மாலை, ரிங்ரோட்டில் காரில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, இவர்கள் மீது மோதுவது போல வந்தது. இதனால், லாரி டிரைவர், கொத்துாரைச் சேர்ந்த டிரைவர் லட்சுமணன், 25, என்பவருடன் இருவரும் சண்டையிட்டனர். ஒரு கட்டத்தில் லாரியின் சாவி மற்றும் லட்சுமணன் மொபைல்போனை, அடாவடியாக இரு சகோரர்களும் எடுத்துச் சென்றனர். சாவியின்றி லாரியை எடுக்க முடியாததால், லாரி உரிமையாளர், தன் நண்பரான கொத்துார் மாதையன், 38, என்பவரிடம் கூறினார். அவர் போய், சகோதரர்களிடம் கேட்டபோது, இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில், சகோதரர்கள் தாக்கியதில், மாதையன் உட்பட நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.அவரின் புகாரின்படி நாகராஜ், 48, பரத், 25, ராமு, ராகவன், 30, என நான்கு பேர் மீது, ஓசூர் டவுன் போலீசார், சாதாரண அடிதடி வழக்கு பதிந்தனர். இந்நிலையில், வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வலியுறுத்தியும், ராமுவை கண்டித்தும், பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உட்பட, 200க்கும் மேற்பட்டோர், ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனை நேற்று காலை முற்றுகையிட்டனர்.அவர்களுடன் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் பேச்சு நடத்தியதை அடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை