உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் வனக்கோட்டத்தில் மனித - விலங்கு மோதல் தடுக்க இரு மாநில வனத்துறையினர் ஆலோசனை

ஓசூர் வனக்கோட்டத்தில் மனித - விலங்கு மோதல் தடுக்க இரு மாநில வனத்துறையினர் ஆலோசனை

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் நடக்கும் மனித - விலங்கு மோதலை தடுக்க, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவிலிருந்து ஆண்டுதோறும் அக்.,ல் இடம் பெயரும், 150க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை வனச்சரகங்களுக்கு வருவது வழக்கம். அப்போது, யானை - மனித மோதல்களால் உயிரிழப்பு ஏற்படுகின்றன. கடந்த, 18 ல், ஜவளகிரி வனச்சரகத்திலிருந்து வெளியேறிய யானைகள் தாக்கி, தளி அருகே பனசுமான தொட்டியை சேர்ந்த பரமேஷ் என்பவர் உயிரிழந்தார். இப்படி மனித - விலங்கு மோதலால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, ஜவளகிரி வனச்சரக அலுவலகத்தில், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, இரு மாநில வனத்துறை இணைந்து, மனித - விலங்கு மோதல்களை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ள முடிவானது.தொடர்ந்து, ஜவளகிரி அடுத்த பாளையம் கிராமம் அருகே, யானைகள் வெளியேறுவதை தடுக்க வனத்துறை அமைத்துள்ள நவீன இரும்பு வடவேலி, நவீன செயற்கை நுண்ணறிவு கேமரா செயல்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து, கர்நாடகா மாநில வனத்துறை அதிகாரிகளுக்கு, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி விளக்கமளித்தார். கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்கா துணை வனபாதுகாவலர் பிரபாகர் பிரியதர்ஷன், கோடியள்ளி வனச்சரகர் அந்தோணி ரேகா, ஆனைக்கல் வனச்சரகர் ரஞ்சிதா, ஓசூர் உதவி வன பாதுகாவலர்கள் கிரீஷ் பால்வே, ராஜமாரியப்பன், டாக்டர் பிரகாஷ், ஜவளகிரி வனச்சரகர் அறிவழகன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை