உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெலமங்கலத்தில் குரு பூர்ணிமா

கெலமங்கலத்தில் குரு பூர்ணிமா

ஓசூர்: கெலமங்கலம் கணேஷ் காலனி சாய்பாபா கோவில் தெருவில், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி கோவில் உள்ளது. இங்கு, சத்ய சாய் சேவா அமைப்பு சார்பில், குரு பூர்ணிமா நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், 5:15 மணிக்கு வேதபாராயணம், நகர சங்கீர்த்தனம், 7:15 மணிக்கு கணபதி, நவக்கிர, குரு பூஜை நடந்தது. தொடர்ந்து சாய்பாபா மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 8:00 முதல், மதியம், 1:00 மணி வரை, கீதா பாராயண ஹோமம், மகா மங்கள ஆரத்தி, இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, 8:30 மணிக்கு பிரசாத வினியோகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்