மேலும் செய்திகள்
பேரூர் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
23-Aug-2024
ஓசூர்: ஓசூர் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் பாபு பிரசாந்த்; இவர் இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்-டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில், துாத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி ஏ.எஸ்.பி.,யாக இருந்த ஐ.பி.எஸ்., அதிகாரி-யான அக்சய் அனில் வாகரே, ஓசூர் உட்கோட்ட ஏ.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். ஓசூர் உட்கோட்ட இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, மாவட்ட எஸ்.பி., தங்கதுரையை, ஏ.எஸ்.பி., அக்சய் அனில் வாகரே சந்தித்து வாழ்த்து பெற்றார். மஹாராஷ்டிரா மாநி-லத்தை சேர்ந்த அக்சய் அனில் வாகரே கடந்த, 2022ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, கடந்தாண்டு பிப்., மாதம் முதல், துாத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி ஏ.எஸ்.பி.,யாக இருந்தார் என்பது குறிப்பி-டத்தக்கது.
23-Aug-2024