உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புதிய வழித்தடங்களுக்கான பஸ் சேவை துவக்கி வைப்பு

புதிய வழித்தடங்களுக்கான பஸ் சேவை துவக்கி வைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (சேலம்), தர்மபுரி மண்டலம் சார்பில் புதிய மற்றும் நீட்-டிக்கப்பட்ட வழித்தடங்களுக்கான பஸ் சேவையை, தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் சரயு, கிருஷ்ணகிரி காங்., எம்.பி., கோபிநாத், கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதன்படி, புதிய பஸ்கள் கிருஷ்ணகிரி - கப்பல்வாடி (வழி) ஜெகதேவி, பர்கூர், கிருஷ்ணகிரி - ஒப்பதவாடி (வழி) பர்கூர், அங்கிநாயனப்பள்ளி, கிருஷ்ணகிரி - ஆம்பள்ளி (வழி) பர்கூர், சிகரலப்பள்ளி, ஓசூர் - அசோக் லைலேண்ட் (வழி) தர்கா, தேன்-கனிக்கோட்டை - மேலூர் (வழி) இருதுகோட்டை, அய்யூர் வழித-டங்களிலும், தேன்கனிக்கோட்டை கிளையில் ஓட்டுனர், நடத்துனர்கள் ஓய்வ-றையை புதுப்பித்து குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையாக மேம்ப-டுத்தி பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு வழித்தடங்களை நீட்டிப்பு சேவையையும் துவக்கி வைத்தார்.நகராட்சி தலைவர் பரிதாநவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ