உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.29.96 லட்சம் மதிப்புள்ள திட்ட பணிகள் துவக்கி வைப்பு

ரூ.29.96 லட்சம் மதிப்புள்ள திட்ட பணிகள் துவக்கி வைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 29.96 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைக்கப்பட்டது.கிருஷ்ணகிரி ஒன்றியம் பச்சிகானப்பள்ளி பஞ்., புதுபேயனப்பள்ளி கிராமத்தில், ஜல் ஜீவன், 2024-2025ம் ஆண்டு நபார்டு திட்டத்தில், 8.04 லட்சம் ரூபாய் மதிப்பில், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், இதே திட்டத்தில், பெரியமுத்துார் பஞ்., உத்தேரிகொட்டாய் கிராமத்தில், 18.42 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்படுகிறது.மேலும், 2024 - 2025ம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், பெரியமுத்துார் பஞ்., புல்லுகான்கொட்டாய் கிராமத்தில், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ஆழ்துளை கிணறு, பவர் பம்பு பைப்லைன் மற்றும் மினி டேங்க் அமைக்கப்படுகிறது.மொத்தம், 29.96 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை, கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார்.ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் ஜெயராமன், மகேந்திரன், சோக்காடி பஞ்., தலைவர் கொடிலா ராமலிங்கம், பஞ்., துணைத் தலைவர் நாராயணகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ