மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரியில் டெங்கு ஒழிப்பு பணி
30-Aug-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள அறி-வுசார் மையம் மற்றும் நுாலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை-களில் தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பன்னீர்-செல்வம் பேசுகையில், ''மாணவர்கள் பள்ளி பருவத்தில் சினத்தை குறைத்து, சிந்தனையை அதிகரிக்க வேண்டும். கிடைக்கும் நேரங்களில் புத்தக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதை மேடைகளில் அழகு தமிழில் வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்க முடியும். அதற்கு நுாலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து பயன் பெற வேண்டும்,'' என்றார்.கிருஷ்ணகிரி நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், ஆர்.ஐ., தாமோதரன், இளநிலை பொறியாளர்கள் உலகநாதன், அறிவழகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள், பாரத் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மற்றும் வாசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.
30-Aug-2024