உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வயநாடு பேரிடருக்கு ரூ.10,000 வழங்கிய சிறுவனுக்கு பாராட்டு

வயநாடு பேரிடருக்கு ரூ.10,000 வழங்கிய சிறுவனுக்கு பாராட்டு

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாமில் கட்டப்பட்டு வரும் வீடுகளை, தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சராயு மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு வந்த கொட்டுக்காரண்பட்டி கிராமத்தை சேர்ந்த கற்பூரசுந்தரபாண்டி மகன் பிடல் காஸ்ட்ரோ, 4, தன் உண்டியலில் சேர்த்து வந்த பணத்தை, தற்போது கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் நடந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக, 10,000 டி.டி.,யாக அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். அவரை பலரும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ