உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காலபைரவர் கோவிலில் கும்பாபி ஷேக விழா

காலபைரவர் கோவிலில் கும்பாபி ஷேக விழா

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், காலபைரவர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணகிரி, கல்லுகுறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் அமைந்துள்ள, காலபைரவர் கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த, 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் காலை தீர்த்தக்குடம் எடுத்தல், 10ல், கணபதி பூஜை, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை, நவக்கிரஹ ஹோமம் நடந்தது.நேற்று காலை காலபைரவ மஹா ஹோமம், நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை காட்டப்பட்டது. 7:30 மணிக்கு விநாயகர், பைரவ லிங்கம், மஹாநந்தி, கஜலட்சுமி, நவகிரகம், காலபைரவ சுவாமி கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபி ேஷகம் செய்தனர்.தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் காங்., -- எம்.பி., செல்வக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்