உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 33 ஆண்டுக்கு பின் சந்தித்து அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி

33 ஆண்டுக்கு பின் சந்தித்து அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தொகரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1991- - 92 ல், 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர், 33 ஆண்டுகளுக்கு பிறகு, அதே பள்ளியில் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். 1991- -92 ல் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் செங்குட்டுவன், தெய்வானை, காவேரி அம்மாள், சின்னசாமி பத்மாவதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பள்ளி மாணவர்கள் தங்கள் பழைய பள்ளி நினைவுகளையும், தற்போது பல்வேறு பணிகளில் இருந்தாலும், நண்பர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் கூறினர். தங்களுக்கு பள்ளி கல்வியை திறம்பட கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.தொடர்ந்து நடப்பாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில், முதல், 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை