உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேசிய நெடுஞ்சாலையில் 5 இடங்களில் மேம்பால பணி இழுபறி 11 மாதத்தில் விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலி

தேசிய நெடுஞ்சாலையில் 5 இடங்களில் மேம்பால பணி இழுபறி 11 மாதத்தில் விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலி

ஓசூர்: ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சா-லையில், 118.86 கோடி ரூபாய் மதிப்பில், 5 இடங்களில் மேம்-பாலம் அமைக்கும் பணி இழுபறியாக நடந்து வருகிறது. இதனால் கடந்த, 11 மாதத்தில் விபத்தில் சிக்கி, 40க்கும் மேற்-பட்டோர் பலியாகி உள்ளனர்.கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் துவங்கி, ஓசூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அங்-கிருந்து, ஓசூர் வழியாக அத்திப்பள்ளி வரை தேசிய நெடுஞ்-சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் தினமும், 80 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் செல்கின்றன. சனி, ஞாயிறு விடு-முறை நாட்களில் கூடுதல் வாகனங்கள் செல்லும். இந்த சாலையில் விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சூளகிரி அருகே சுண்ட-கிரி, மேலுமலை மற்றும் கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே என மொத்தம், 5 இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி, 118.86 கோடி ரூபாய் மதிப்பில் கடந்தாண்டு அக்., மாதம் துவங்கப்பட்டது. ஓராண்-டிற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த, 5 மேம்-பால பணிகளையும் ஒரே நிறுவனம் மட்டுமே எடுத்து மேற்-கொள்கிறது. ஆட்கள் பற்றாக்குறை, மண் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களை காட்டி, பணி இழுத்தடிக்கப்பட்டு வருகி-றது. பாலம் வேலை நடப்பதால், அப்பகுதிகளில் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்-கைக்கு ஏற்ப பெரிய அளவில் இல்லை. இதனால் தினமும் போக்-குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவ-குத்து நிற்கின்றன. போலுப்பள்ளியில் மட்டும் பாலம் வேலை இன்னும் துவங்கப்படவில்லை. சர்வீஸ் சாலை மட்டுமே அமைக்-கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் மந்த கதியில் நடக்கும் பால பணிகளால், கடந்த 11 மாதத்தில், 40 க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். போலீசார் அழுத்தம் கொடுத்தும், பால பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்த நிறு-வனம் முன்வரவில்லை. ஓராண்டிற்குள் பணிகள் முடிவது கேள்-விக்குறி தான். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் கண்டு-கொள்ளாமல் மவுனம் காக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி விலைமதிப்பிலாத உயிர்களை இழந்து வருகின்றனர். எனவே, பால பணிகளை விரைந்து முடிந்து, விபத்துகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்