உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இறகுப்பந்து போட்டியில் வெற்றி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு

இறகுப்பந்து போட்டியில் வெற்றி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் என்.ஜி.ஜி.ஓ., காலனி லிட்டில் இங்கிலாந்து பேட்மிட்டன் அகாடமியில், 3ம் ஆண்டு இறகுப்-பந்து போட்டி நடந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாண-வியர் பங்கேற்றனர். வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்-தய்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநகராட்சி பொது சுகா-தார குழு தலைவர் மாதேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை