உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரூர் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

அரூர் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

அரூர்: அரூர் அடுத்த பெரியப்பட்டியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் கடந்த, 15 நாட்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் கிராம மக்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, 8:00 மணிக்கு காலிக்குடங்களுடன் பெரியப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த அரூர் துணை பி.டி.ஓ., நித்யா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் மறியலை மக்கள் கைவிட்டனர்.அதேபோல, மொரப்பூர் அடுத்த எம்.வெளாம்பட்டியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த, 6 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. இது குறித்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை. நேற்று காலை, 10:00 மணிக்கு குடிநீர் வழங்கக்கோரி அங்குள்ள பஸ் நிறுத்தத்தில், கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த மொரப்பூர் போலீசார் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, ஒரு சில நாட்களில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், மறியலில் ஈடுபட்டவர்கள், கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை