உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து மாநில எல்லையில் சாலைமறியல்

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து மாநில எல்லையில் சாலைமறியல்

ஓசூர்: ஓசூர் அருகே மாநில எல்லையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து, கர்நாடக மாநில தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னையில், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக அரசை வலியுறுத்தியும் சாலை மறியல் நடந்தது. கர்நாடக மாநில தலித் அமைப்புகளின் கூட்டமைப்பான பீமா கூட்டமைப்பினர் சார்பில், தமிழக, கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடியில், நேற்று காலை, 11:00 மணியளவில் இந்த சாலை மறியல் நடந்தது. பீமா கூட்டமைப்பின் மாநில தலைவர் ஸ்ரீஹெப்பாலா வெங்கடேஷ் தலைமை வகித்தார். இதில் பெண்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் தமிழக எல்லைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை, கர்நாடக மாநில போலீசார் தடுத்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்கள், கர்நாடக மாநில எல்லையில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ