உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.47 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

ரூ.47 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

அரூர்: அரூர் அடுத்த புழுதியூர் வாரச்சந்தைக்கு, ராம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நேற்று, 300க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும், விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,800 முதல், 7,500 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆடும், 500 முதல், 700 ரூபாய் வரை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்பனையானது.இதேபோல், நேற்று கூடிய சந்தையில், கலப்பின மாடு ஒன்று, 45,000 முதல், 73,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், ஆடுகள், 24 லட்சத்திற்கும், மாடுகள், 23 லட்சம் ரூபாய் என, மொத்தம், 47 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி