உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / திடீர் வாந்தி, மயக்கம் ஓசூரில் 15 பேர் அட்மிட்

திடீர் வாந்தி, மயக்கம் ஓசூரில் 15 பேர் அட்மிட்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன எலசகிரி, அம்பேக்கர் நகர் குடியிருப்பில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பலருக்கு நேற்று காலை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று மதியம் வரை, ஓசூர் அரசு மருத்துவமனையில் மஞ்சுளா, 34, எல்லம்மா, 66, உள்ளிட்ட 8 பேரும், தனியார் மருத்துவமனையில், 7 பேரும் என மொத்தம், 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இப்பகுதி குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அப்பகுதியிலுள்ள ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து, வீடுகளுக்கு குழாயில் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. ஒரே நேரத்தில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், குடிநீரில் கழிவுகள் கலந்துள்ளதா என, மக்கள் சந்தேகம் எழுப்பினர்.ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, மேயர் சத்யா, மாநகராட்சி கமிஷனர் சினேகா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் மருத்துவ குழுவினர், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். குடிநீரில் கழிவுப்பொருட்கள் அல்லது தொழிற்சாலை கழிவு நீர் கலந்துள்ளதா என விசாரித்து வருகின்றனர். ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் மற்றும் சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை