உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அம்மன் தாலியை திருடியவர் கைது

அம்மன் தாலியை திருடியவர் கைது

ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே, கீரனப்பள்ளியில் உள்ள மாரியம்மன் கோவிலில், சுவாமி கழுத்தில் கிடந்த அரை பவுன் தாலியை, வாலிபர் ஒருவர் நேற்று அதிகாலை திருடினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், வாலிபரை பிடித்து உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், உத்தனப்பள்ளி அருகே தேவசா-னப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன், 38, என்பதும், இவர் மீது இரு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அரை பவுன் தாலியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை