உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொடர் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது;15 பைக்குகள் பறிமுதல்

தொடர் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது;15 பைக்குகள் பறிமுதல்

ஓசூர்: ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில், தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட, 2 சிறுவர்கள் உட்பட, 3 பேர் கைது செய்யப்பட்டனர். 15 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், இ.எஸ்.ஐ., ரிங்ரோட்டில் நேற்று காலை வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்ததால், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கடமடை பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், 19, மற்றும் 17 வயது சிறுவர் இருவர் என்பது தெரிந்தது. இவர்கள் மூன்று பேரும், ஓசூர் டவுன், சிப்காட் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி, சர்ஜாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.இவர்களது தலைவனான ஜெய்ஸ்ரீ என்பவரை, சில மாதங்களுக்கு முன் ஹட்கோ போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொழில் கற்று கொண்ட இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து, தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். சந்தோஷ்குமார் உட்பட மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பைக் திருட்டு கும்பலை கைது செய்த இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசாரை, எஸ்.பி., தங்கதுரை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை