உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீரணகுப்பம் பகுதியில் தகராறு ஓட்டுப்பதிவு நிறுத்தி வைப்பு

வீரணகுப்பம் பகுதியில் தகராறு ஓட்டுப்பதிவு நிறுத்தி வைப்பு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வீரண குப்பம் பகுதி, அ.தி.மு.க., கிளை செயலாளர் அண்ணாதுரை, 50. இவரது பெயர் வோட்டர் லிஸ்டில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி தகராறு செய்ததால், 1 மணி நேரம் ஓட்டு போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டு போட சென்ற அண்ணாதுரை, வோட்டர் லிஸ்டில் தனது பெயர் இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். இதனால், 1 மணி நேரத்திற்கு மேலாக ஓட்டு போட தாமதமானது. கடந்த, 30 ஆண்டுகளாக ஓட்டு போட்டு வந்தேன் தற்போது, பட்டியலிலேயே தனது பெயர் இல்லை என்று ஆதங்கத்தை தெரிவித்தார். மேலும் இது ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் சதி என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ