உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கணவனை கொன்ற மனைவி 19 வயது கள்ளக்காதலனுடன் கைது

கணவனை கொன்ற மனைவி 19 வயது கள்ளக்காதலனுடன் கைது

போச்சம்பள்ளி,:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த, பாலேகுளி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார், 25, ஓசூர் தனியார் கம்பெனி ஊழியர். சூளகிரி, விலாலம் கிராமத்தை சேர்ந்தவர் சுஜாதா, 19; இருவருக்கும், 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், பள்ளி படிப்பின்போது காதலித்த கணேசன், 19, என்பவருடன் அடிக்கடி தனிமையில் இருந்தார். இதனால் கணவனுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வெறுப்பை காட்டி வந்தார்.காதலன் கணேசன், அவருடைய, 18 வயது நண்பருடன் சுஜாதா சேர்ந்து கொண்டு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வீட்டில் துாங்கி கொண்டிருந்த ராம்குமாரை, கடப்பாரையால் தாக்கியும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்தார்.இருவரும் சென்ற நிலையில், ராம்குமார் வாயிலிருந்து ரத்தம் வருவதாக, சுஜாதா நேற்று அதிகாலை கூச்சலிட்டார். அருகில் வசிக்கும் ராம்குமாரின் தந்தை முருகேசன், தாய் ராஜம்மாள் வந்து பார்த்தபோது, மகன் வாயில் ரத்தம் கசிந்தபடி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பர்கூர் டி.எஸ்.பி., ப்ரித்திவிராஜ் சவுகான் தலைமையிலான தனிப்படை போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை சுஜாதா ஒப்புக்கொண்டார். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை