மேலும் செய்திகள்
பெங்களூரில் வெளுத்து வாங்கிய திடீர் கனமழை
16-May-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. பேரிகை அருகே புக்கசாகரத்தை சேர்ந்த நாகராஜ், 45, என்பவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை அமைத்து, 2,340 கோழிகள் மற்றும் குஞ்சு-களை பராமரித்து வந்தார்.அப்பகுதியில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதியில் இருந்த பண்ணைக்குள், மழைநீர் புகுந்தது. இதில், பண்ணையில் ஒரு கிலோ எடையில் இருந்த, 2,000 கோழிகள் மற்றும் குஞ்-சுகள் உயிரிழந்தன. 340 கோழிகள் தப்பின. பேரிகை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
16-May-2025