உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஏரியில் 3 யானைகள் முகாம்

ஏரியில் 3 யானைகள் முகாம்

ஓசூர் : தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 3 யானைகள், அருகிருள்ள பெரிய ஏரிக்கு சென்று நேற்று கும்மாளமிட்டன. இதையறிந்த மக்கள், யானைகளை வேடிக்கை பார்க்க குவிந்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். நீண்ட நேரத்துக்கு பின், யானைகள் வனப்பகுதி நோக்கி சென்றன.அதேபோல், தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில், விவசாய நிலங்களில் இரு யானைகள் முகாமிட்டு, பயிர்களை நாசம் செய்தன. பகல் நேரத்தில் யானைகள் நிலத்தில் சுற்றித்திரிந்ததால், விவசாய பணிக்கு சென்ற விவசாயிகள் கடும் அச்சமடைந்தனர். யானைகளை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், சத்தம் போட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர். அருகில் உள்ள வனப்பகுதிக்குள் யானைகள் சென்றதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை