உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க.,விற்கு தாவிய 24 மணி நேரத்தில் ரிட்டன்மீண்டும் தி.மு.க.,வில் இணைந்த 3 நிர்வாகிகள்

அ.தி.மு.க.,விற்கு தாவிய 24 மணி நேரத்தில் ரிட்டன்மீண்டும் தி.மு.க.,வில் இணைந்த 3 நிர்வாகிகள்

ஓசூர்,:அ.தி.மு.க.,வில் இணைந்த அடுத்த, 24 மணி நேரத்திற்குள், தி.மு.க.,விற்கே மூன்று நிர்வாகிகள் திரும்பி வந்தனர்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகர தி.மு.க., தெற்கு பகுதி செயலாளராக இருந்தவர் திம்மராஜ். இவர், குரும்பர் சமூகத்தை, தி.மு.க., புறக்கணிப்பதாக கூறி, நேற்று முன்தினம் சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., முன்னிலையில், தன் சமூக மற்றும் பிற சமூகத்தை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகள், 25 பேருடன் சென்று, அ.தி.மு.க.,வில் இணைந்தார்.சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளுங்கட்சி பகுதி செயலாளர் அ.தி.மு.க.,வில் இணைந்தது, தி.மு.க., தலைமையை அதிர்ச்சியடைய செய்தது. தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ.,வை, தலைமையில் இருந்து தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். திம்மராஜ் அழைத்ததால் அவருடன் சென்று அ.தி.மு.க.,வில் இணைந்த, சூளகிரி வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சித்தராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி வடக்கு ஒன்றிய துணை அமைப்பாளர் ஹரிஸ், இலக்கிய அணி தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் பாலசந்திரன் ஆகிய, 3 பேர், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ.,வை நேற்று சந்தித்து, தங்களை மீண்டும் தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.அ.தி.மு.க., பக்கம் சென்ற, 24 மணி நேரத்திற்குள், 3 பேர் திரும்பி தி.மு.க., பக்கம் வந்துள்ளனர்.இதுமட்டுமின்றி, அங்கு சென்ற மேலும் சிலர் திரும்பி வர இருப்பதாக, தி.மு.க.,வினர் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், 'திம்மராஜ், அ.தி.மு.க., பக்கம் எந்த நேரத்திலும் சென்று விடுவார் என்ற சூழ்நிலை இருந்ததால் தான், அவருக்கு கட்சியில் பதவி கொடுக்கப்படாமல் இருந்தது.ஆனால், மாநகர செயலாளர் சத்யா ஆதரவாளராக தன்னை காட்டி கொண்ட திம்மராஜ், பகுதி செயலாளர் பதவியை பெற்று, அப்பதவியை அனுபவித்த பின், அ.தி.மு.க., பக்கம் தாவியுள்ளார். இதற்கு மேலாவது தி.மு.க., தலைமை, உண்மையான கட்சி தொண்டனுக்கு பதவி வழங்க வேண்டும்' என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி