உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக்கில் அரிவாளுடன் சுற்றி வந்த 3 பேர் கைது

பைக்கில் அரிவாளுடன் சுற்றி வந்த 3 பேர் கைது

ஊத்தங்கரை: ஊத்தங்கரை போலீஸ் எஸ்.எஸ்.ஐ., கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார், கல்லாவி சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்-வழியாக ஸ்கூட்டரில் வந்த, 3 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஸ்கூட்டருக்குள் அரிவாள் ஒன்று வைத்திருந்-தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டம் பெரிய ஆண்டிப்பாளை-யத்தைச் சேர்ந்த வல்லரசு, 25, முருக்கம்பாளையம் தீபக் ரகுநாத், 21, விருதுநகர் மாவட்டம் நிர்மல்ராஜா, 20, என தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், எதற்காக அரிவாளுடன் வந்-தனர் என, விசாரணை நடத்தி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ