மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம்
12-Aug-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம், 216 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2.69 லட்சம் ரூபாய் மதிப்பில் செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோபு, தர்மராஜ், மாற்றுத்திறானளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
12-Aug-2025