உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய 4 லாரி பறிமுதல்

மண் கடத்திய 4 லாரி பறிமுதல்

பேரிகை, பேரிகை அடுத்த ராமச்சந்திரம் பஸ் ஸ்டாப் அருகே, புக்கசாகரம் வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் மாலை அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் எம்.சாண்ட் கொண்டு சென்றது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து, பேரிகை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.* மத்துார் அடுத்த, சாலுார் கிராமத்திலிருந்து சாமல்பட்டிக்கு நேற்று அதிகாலை அனுமதியன்றி செம்மண் டிம்பர் லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. எஸ்.எஸ்.ஐ., மகாலிங்கம் அந்த, வாகனத்தை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்.* காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஹள்ளி வி.ஏ.ஓ., வனஜா மற்றும் அலுவலர்கள், மிட்டஹள்ளி சேரன் நகரில் நேற்று முன்தினம் நின்றிருந்த டிப்பர் லாரியை சோதனையிட்டனர். அதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.*ஜெகதேவி வி.ஏ.ஓ., தீபா மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. புகார் படி பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை