உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பர்கூர் ஐயப்பன் கோவிலில் 41ம் ஆண்டு மகர விளக்கு பூஜை

பர்கூர் ஐயப்பன் கோவிலில் 41ம் ஆண்டு மகர விளக்கு பூஜை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐயப்பன் கோவில், 41ம் ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜை மற்றும் புதிய தேர் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கோ பூஜை, ஐயப்ப சுவாமிக்கு காப்பு கட்டுதல், புதிய தேர் கலச பிரதிஷ்டை மற்றும் யாகசாலை பூஜை ஆகியவை நடந்தது. ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. பாரத கோவிலில் இருந்து கைலாசநாதர், தாயார் பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணத்திற்கு, பெண்கள் சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவிலில், பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.குருசாமி தலைமையில் கன்னி பூஜையும், ஐயப்பனுக்கு, 18 படி பூஜையும், மஹா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். மேலும், பம்பை, சிலம்பாட்டம், மயில், மாடு, சிவருத்ர தாண்டவ நடனம் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, ஐயப்பன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை