உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 5 பேர் கைது

புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 5 பேர் கைது

புகையிலை பொருட்கள்லாட்டரி விற்ற 5 பேர் கைதுகிருஷ்ணகிரி, டிச. 1-வேப்பனஹள்ளி போலீசார், கொங்கனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற, யானைக்கால் தொட்டியை சேர்ந்த ஈஸ்வரன், 34 என்பவரை கைது செய்தனர். அதேபோல மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பெட்டிகடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி அல்தாஸ், ஓசூர் அண்ணா நகர் சங்கரப்பா உட்பட, 4 பேரை போலீசார் கைது செய்து, 620 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை