உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி /  அ.தி.மு.க., நிர்வாகியின் டிரைவர் கொலை பெண் உட்பட 7 பேர் சுற்றிவளைப்பு

 அ.தி.மு.க., நிர்வாகியின் டிரைவர் கொலை பெண் உட்பட 7 பேர் சுற்றிவளைப்பு

ஓசூர்: அ.தி.மு.க., நிர்வாகியின் கார் டிரைவர் கொலை வழக்கில், அவரது கள்ளக்காதலியே , கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, கள்ளக்காதலி, கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, மாரச்சந்திரத்தை சேர்ந்தவர் ஹரீஷ், 32; கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் பிரசாந்த் என்பவரின் கார் டிரைவர். இவருக்கும், ஓசூர் , வானவில் நகரில் கணவரை பிரிந்து வாழும் மஞ்சுளா, 35, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. டிச., 2ம் தேதி இரவு, மஞ்சுளா வீட்டிற்கு சென்று திரும்பிய வழியில், ஹரீஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஹட்கோ இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரித்தார். ஏற்கனவே பிப்., மாதம், ஹரீஷ் தன்னை துன்புறுத்துவதாக மஞ்சுளா போலீசில் புகார் அளித்திருந்தார். அதனால், மஞ்சுளா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. போலீசார் கூறியதாவது: ஹரீஷுக்கு திருமணமாகாத நிலையில், மஞ்சுளாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து, 80 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். மஞ்சுளா தன்னை திருமணம் செய்ய கேட்டும், ஹரீஷ் சம்மதிக்கவில்லை. கடந்த பிப்., மாதம் பணம் கேட்டு தொந்தரவு செய்து அடித்ததால், மஞ்சுளா போலீசில் புகார் அளித்தார். அதன்பின், இருவரும் ஒன்றாக சேர்ந்த போதும், தினமும், 2,000 ரூபாய் வேண்டும் என, ஹரீஷ் தொந்தரவு செய்துள்ளார். அதனால் அவரை தீர்த்துக்கட்ட மஞ்சுளா முடிவு செய்தார். தனக்கு தெரிந்த கூலிப்படையை சேர்ந்தவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் தருவதாக கூறி, ஹரீஷை கொல்ல ஏற்பாடு செய்தார். அதன்படி, டிச., 2ம் தேதி ஹரீஷ் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டார். மஞ்சுளா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கர்நாடகாவில் இவர் மீது ஒரு விபசார வழக்கு உள்ளது. இக்கொலை தொடர்பாக, மஞ்சுளா மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஓசூர் மாலுகிரியை சேர்ந்த மோனீஸ், 24, உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ