உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் பைனான்ஸ் ஊழியர் கொலை வரவழைத்து தீர்த்து கட்டிய சிறுவன்

ஓசூரில் பைனான்ஸ் ஊழியர் கொலை வரவழைத்து தீர்த்து கட்டிய சிறுவன்

ஓசூர், ஆக. 27ஓசூரில் பைனான்ஸ் நிறுவன ஊழியரை வரவழைத்து வெட்டிக்கொன்ற, 15 வயது சிறுவன் உள்ளிட்ட கும்பலை, போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ், 32; பெங்களூரு தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர். தவணை செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்யும் பிரிவில் பணிபுரிந்தார். வெங்கட்ராஜ் வசிக்கும் தெரு வழியாக, தொரப்பள்ளியை சேர்ந்த சிக்கன் கடையில் பணியாற்றும், 15 வயது சிறுவன், அவரது நண்பருடன் பைக்கில் நேற்று முன்தினம் இரவு வேகமாக சென்றுள்ளார். குழந்தைகள் இருப்பதால் மெதுவாக செல்லுமாறு எச்சரித்துள்ளார். ஆனாலும் மீண்டும் பைக்கில் வேகமாக சென்றதால் பைக்கை தடுத்து நிறுத்திய வெங்கட்ராஜ் சிறுவனை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், 'தைரியமிருந்தால் தொரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் வா' என்று கூறியுள்ளான்.சிறுவன் சவால் விட்டதால் இரவு, 11:00 மணிக்கு வெங்கட்ராஜ் தனியாக சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த சிறுவன் மற்றும் தொரப்பள்ளியை சேர்ந்த பைக் மெக்கானிக் அஸ்லம், 19, நவீன்ரெட்டி, 29, மற்றும் சிலர் வெங்கட்ராஜை சுற்றி வளைத்து, சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றனர்.வெங்கட்ராஜ் மனைவி பிரியங்கா புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நவீன்ரெட்டி, அஸ்லம், 15, 18 வயது சிறுவன் என நான்கு பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான ஐந்து பேரை தேடி வருகின்றனர். கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, ஓசூர் அரசு மருத்துவமனையில் வெங்கட்ராஜ் சடலத்தை உறவினர்கள் நேற்று வாங்க மறுத்து, 75க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் திரண்டனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளிக்கவே சடலத்தை வாங்கிச் சென்றனர். கொலையான வெங்கட்ராஜுக்கு, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி