மளிகை கடை உரிமையாளர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
ஓசூர்: சூளகிரி அருகே, சின்னாறு கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 46. அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்; நேற்று மதியம் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக டி.வி.எஸ்., ஸ்கூட்டரில், ஓசூர் நோக்கி வந்தார். கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பேரண்டப்பள்ளி பகுதியில் மதியம், 3:00 மணிக்கு சென்றபோது, பைக்கில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பின் சக்கரத்தில் சிக்கி, தலை முதல், உடலின் பாதி பகுதி வரை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.