உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆதிபராசக்தி, ஐயப்பசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

ஆதிபராசக்தி, ஐயப்பசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி அடுத்த, ஆனந்துாரில் புதியதாக கட்டப்பட்ட ஆதிபராசக்தி, ஐயப்பசுவாமி கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று காலை 2ம் கால யாக வேள்வி பூஜை தொடங்கி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. பிறகு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, வேதம், ராகம், தாளம் வாத்தியங்கள் முழங்க விமான கோபுர கலசங்களுக்கு மஹா தீர்த்தத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி