| ADDED : மார் 15, 2024 02:34 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் தேர்பேட்டையிலுள்ள சந்திரசூடேஸ்வரர் கோவில்
திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடக்கும். இதில், தமிழகம்,
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், கலந்து கொள்வது
வழக்கம். வரும், 24ல் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்விழா
நடக்கிறது. அதற்காக தேர்கட்டும் பணியும் மும்முரமாக நடந்து
வருகிறது. இந்நிலையில், கோவில் தேர்திருவிழாவின் போது, வரும்
பக்தர்கள் பாதுகாப்பு குறித்து, ஓசூர் சப் கலெக்டர் அலுவலகத்தில்
ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் பிரியங்கா தலைமை வகித்து,
பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பக்தர்கள்
சிரமமின்றி கோவிலுக்கு வந்து செல்வது, போக்குவரத்து நெரிசலை
கட்டுப்படுத்துவது, திருட்டு சம்பவத்தை தடுப்பது, குடிநீர், மொபைல்
டாய்லெட் மற்றும் நகர் முழுவதும், 150க்கும் மேற்பட்ட இடங்களில்,
'சிசிடிவி' பொருத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஓசூர் டி.எஸ்.பி., பாபுபிரசாந்த், ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.